விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 36
#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education
விடுகதைகள்
கேள்வி – ஆகாயத்திலிருக்கும் அற்புத மனிதன் ஆற்றிலும் விழுவான்; குளத்திலும் விழுவான்; ஆனால் நனைய மாட்டேன்
விடை – சூரியன்.
கேள்வி – வெட்ட வெட்டத் தழைக்கும் பட்டணத்து வேம்பு, அது என்ன?
விடை – தலைமுடி.
கேள்வி – சூரியன் காணாத கங்கை, சுண்ணம் தோற்கும் வெள்ளை, மண்ணிற் பண்ணாத பாண்டம்.
விடை – தேங்காய்.
கேள்வி – பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன?
விடை – குழி.
கேள்வி – வட்ட வட்டச் சிமிழில் இட்டதெல்லாம் குட்டிப் பாம்பு.
விடை – இடியாப்பம்.
கேள்வி – தேய்க்கத் தேய்க்க நுரைக்கும் அடிக்க அடிக்க வெளுக்கும்.
விடை – சோப்பு.
கேள்வி – எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம்.
விடை – தேன் கூடு.