விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 33

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 33

#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education

விடுகதைகள்

கேள்வி – நடக்க முடியாது, ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?

விடை – கடிகாரம்.

கேள்வி – முதுகை அமுக்கினால் மூச்சு விடுவான் பல்லை அழுத்தினால் பாட்டுப் பாடுவேன் அது என்ன?

விடை – ஆர்மோனியம்.

கேள்வி – அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.

விடை – நிலா.

கேள்வி – ஏணிமேலே கோணி; கோணி மேலே குழாய்; குழாய் மேலே குண்டு; குண்டு மேலே புல்லு; புல்லு மேலே பூச்சி.

விடை – மனிதனின் கால், வயிறு, கழுத்து, தலை, மயிர், பேன்.

கேள்வி – மொட்டைப் பாட்டிக்கு, முழுகத் தெரியாது.

விடை – வெண்ணெய்.

கேள்வி – ஐந்து அடுக்கு; நாலு இடுக்கு

விடை – விரல்கள்.

கேள்வி – கிணற்றைச் சுற்றிப் புல்.

விடை – கண் புருவம்.

கேள்வி – சாண் உயரப் பையன், வைத்ததெல்லாம் சுமப்பான்.

விடை – அடுப்பு.

கேள்வி – பட்டணத்தில் இருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன். ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது.

விடை – சூடம், சாம்பிராணி

கேள்வி – அக்கா சப்பாணி. தங்கை நாட்டியக்காரி.

விடை – உரல், உலக்கை.

Previous post விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 32
Next post விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *