விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 32

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 32

#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education

விடுகதைகள்

கேள்வி – படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும், அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்.

விடை – கனவு

கேள்வி – ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் படுத்து விடுவான்

விடை – பம்பரம்.

கேள்வி – கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும்.

விடை – செருப்பு.

கேள்வி – ஒரு பானைச் சோறு வடித்து, ஓராயிரம் பேருக்குப் போட்டு,இன்னும்கூட மிச்சமிருக்கு.

விடை – சுண்ணாம்பு.

கேள்வி – மடக்காமல் பறக்குதே, அது என்ன மந்திரி ? சிமிட்டாமல் விழிக்குதே, அதுதான் அரசே.

விடை – தட்டாரப் பூச்சி.

கேள்வி – ஒல்லியான மனிதன் ; ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன்?

விடை – ஊசி,

கேள்வி – நீரிலே கொண்டாட்டம்; நிலத்திலே திண்டாட்டம்

விடை – மீன்.

கேள்வி – சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர்

விடை – தீக்குச்சி.

கேள்வி – கோயிலைச் சுற்றிக் கறுப்பு, கோயிலுக்குள்ளே வெளுப்பு

விடை – சோற்றுப் பானை.

கேள்வி – பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா.

விடை – சீத்தாப்பழம்.

Previous post லட்சுமி தேவியின் பிரியமான எவற்றை செய்வதால் செல்வம் வரும்
Next post விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 33

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *