விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 31
#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education
விடுகதைகள்
குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் விடுகதைகள் அவர்களது சிந்தனைத் திறனை வளர்க்கும்.
கேள்வி – வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?
விடை – நாணயம்
கேள்வி – தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான் அவன் யார்?
விடை – தொலைபேசி
கேள்வி – முறையின்றி தொட்டால் ஒட்டிக்கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?
விடை – மின்சாரம்
கேள்வி – கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்க முடியாது அவன் யார்?
விடை – நிழல்
கேள்வி – வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன?
விடை – செருப்பு
கேள்வி – ஒற்றை கால் மனிதனுக்கு ஒன்பது கை அது என்ன?
விடை – மரம்
கேள்வி – தாகம் தீர்க்கும் தண்ணீர் சொம்பு அந்தரத்தில் தொங்குது அது என்ன?
விடை – இளநீர்
கேள்வி – சின்ன கதவுகள், லட்சம் முறை மூடி திறந்தாலும் ஓசை வராத கதவுகள் அது என்ன?
விடை – கண் இமைகள்
கேள்வி – எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் அவன் யார்?
விடை – விமானம்
கேள்வி – குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் அது என்ன?
விடை – மாதுளை
கேள்வி – கரைந்து போகுது வெள்ளி தட்டு
விடை – தேய் பிறை
கேள்வி – சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
விடை – கண்
கேள்வி – இவனும் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான் அவன் யார்?
விடை – பணம்
கேள்வி – ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் உள்ளே வரமாட்டன் அவன் யார்?
விடை – செருப்பு
கேள்வி – உரச உரச குழைவான், பூச பூச மனப்பான் அவன் யார்?
விடை – சந்தனம்
கேள்வி – தொப்பி போட்ட காவல் காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான் அவன் யார்?
விடை – தீக்குச்சி
கேள்வி – உடம்பெல்லாம் சிவப்பு அதன் குடுமி பச்சை அது என்ன?
விடை – தக்காளி
கேள்வி – எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன?
விடை – மின் விசிறி
கேள்வி – சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
விடை – வாழைப்பழம்
கேள்வி – முதுகிலே சுமை தூக்கி முணு முணுக்காமல் அசைந்து வரும் அது என்ன?
விடை – நத்தை
கேள்வி – கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
விடை – நிழல்
கேள்வி – செய்தி வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அவன் யார்?
விடை – தொலைபேசி
கேள்வி – வாயில் இருந்து நூல் போடுவான், மந்திரவாதி இல்லை; கிளைக்கு கிளை தாவுவான் ஆனால் குரங்கு இல்லை; வலை விரித்து பதுங்கி இருப்பான் ஆனால் வேடன் இல்லை – அவன் யார்?
விடை – சிலந்தி
கேள்வி – நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
விடை – தையல் ஊசியும் நூலும்
கேள்வி – எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல் அது என்ன?
விடை – விக்கல்
கேள்வி – காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்
விடை – நிழல்
வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
விடை – முட்டை
கேள்வி – நீ எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான் அவன் யார்?
விடை – நிழல்
கேள்வி – முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
விடை – நத்தை
கேள்வி – அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை அது என்ன
விடை – தலை வகிடு
கேள்வி – அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
விடை – தண்ணீர்
கேள்வி – ஊர் முழுவதும் சுற்றுவேன், வீட்டுக்குள் நுழைய மாட்டேன் நான் யார்?
விடை – செருப்பு
கேள்வி – கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?
விடை – தேங்காய்
கேள்வி – தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார்
விடை:தலையணை
கேள்வி – பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்
விடை:சீப்பு
கேள்வி – கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
விடை – பூசனிக்கொடி
கேள்வி – தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
விடை – பென்சில்
கேள்வி – கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் அவன் யார்?
விடை – கரும்பு
கேள்வி – பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
விடை – தலைமுடி
கேள்வி – மூன்றெழுத்துப் பெயர், உடல் முழுவதும் வெள்ளை நிறம் அது என்ன?
விடை – பஞ்சு