விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 29
#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education
குழந்தைகளுக்கு கதைகள் மற்றும் விடுகதைகள் அவர்களது சிந்தனைத் திறனை வளர்க்கும்.
விடுகதைகள்
கேள்வி – இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
விடை – சைக்கிள்
கேள்வி – இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
விடை – பட்டாசு
கேள்வி – உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?
விடை – தராசு
கேள்வி – ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
விடை – எறும்புக் கூட்டம்
கேள்வி – உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
விடை – அஞ்சல் பெட்டி