அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படும் மயிலிறகை உங்கள் படுக்கையறையின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் நீண்ட காலம் முடியாமல் இருக்கும் வேலைகளில் நிச்சயம் மகத்தான வெற்றி கிடைக்குமாம்.
வீட்டில் பணக்கஷ்டத்தை எதிர்கொண்டால், உங்களது அலுவலகத்தில் தென்கிழக்கு திசையில் மயில் இறகுகளை வைக்க வேண்டும். இவை பணத்தட்டுப்பாடு இல்லாமலும், பணம் சம்பாதிக்க புதிய வழிகளையும் சுலபமாக அறிந்து கொள்வீர்கள். நிலுவையில் உள்ள பணமும் வந்து சேரும்.
நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் மயில் இறகானது உங்களது எதிரிகளையும் நண்பராக மாற்றுமாம். நீங்கள் எதிரியாக நினைக்கும் நபரின் பெயரில் எப்பொழுதும் ஒரு மயில் தோகை வைத்திருக்க வேண்டும். இது உங்களுக்கும் அவருக்கும் இடையிலான கசப்பான உறவை நீக்கும்.
வீட்டில் வாஸ்து தோஷம் நீங்க வேண்டும் என்றால் வீட்டின் பிரதான வாசலில் மயில் தோகைகளை வைத்திருக்க வேண்டும். மேலும் கதவை சுத்தமாகவும், விநாயகர் சிலையுடன், மயில் தோசையை வைத்திருக்கவும் வேண்டும். வாஸ்துபடி பொருட்களை வைக்காமல் இருந்தால் இந்த செயல்பாடு வாஸ்து தோஷங்களை நீக்கும்.
படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு நன்கு படிக்க மயில் இறகு உதவுகின்றது. குழந்தைகள் படிக்கும் அறை அல்லது படிக்கும் பொருட்கள் வைக்கும் இடத்தில் மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் நன்கு படிப்பதுடன் நல்ல மதிப்பெண்ணும் எடுப்பார்கள். குழந்தையின் புத்தகங்களுக்கு நடுவே மயிலிறகை வைத்தால், அவர்களின் கையெழுத்து அழகாகும் என்று கூறப்படுகின்றது.