தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்த்தியதோடு, லட்சக்கணக்கான மக்கள் இறுதி சடங்கில் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பாஸ் ப்ரொமோவில் கமல்ஹாசன் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அவரை நினைத்து கண்ணீர் சிந்த வேண்டாம்… அவர் செய்துவிட்டு சென்ற காரியங்களை நினைத்து அதைப் போன்று அனைவரும் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 84 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் மேடையில் கமல்ஹாசன், விஜயகாந்திற்கு இரங்கல்