இன்றைய தினம் டாஸ்க் 2 முயல் max அரங்கேறி வருகின்றது. இதில் இறுதி மேடைக்கு முதல் ஆளாக செல்லும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கின்றது.
நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் என 14 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரவீனா, மணி சந்திரா, மாயா, தினேஷ், நிக்ஷன், விஷ்ணு என 6 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
கடந்த 6 பிக்பாஸ் சீசன்களை விட, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாகவும், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமலும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தற்போது 85நாட்களை கடந்து செல்கின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி மேடைக்கு செல்ல ஒருவர் மட்டும் தெரிவு செய்யப்படும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் டாஸ்க் 2 முயல் max அரங்கேறி வருகின்றது.