இந்த நிலையில் தன்னிடம் இருக்கும் முயலை மணியிடம் கொடுக்கும் போது பூர்ணிமா காரி துப்பி கொடுத்த காட்சி குறும்படமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுமக்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் பூர்ணிமா இப்படி நடந்து கொள்வதை கண்டனத்திற்குரியது.
மாயா- பூர்ணிமா இருவரும் பிக்பாஸ் வீட்டில் என்ன செய்தாலும் நகைச்சுவை என ஆண்டவரிடமிருந்து தப்பிச் செல்கிறார்கள்.
இப்படியொரு நிலையில் இவ்வாறு நடந்து கொண்டு அதனை சக போட்டியாளர்களிடம் கூறி நகைக்கிறார். இதற்கு கமல் என்ன சொல்ல போகிறார் என்பதனை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.
அத்துடன் இப்படியான செயல் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு அழகு இல்லை எனவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
இந்த டாஸ்க் “ தங்க முயல் டாஸ்க்” என அழைக்கப்பட்டது. இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே ரவீனா, தினேஷ், விசித்ரா ஆகியோர் தோல்வியை தழுவி வெளியேறினர்.
மேலும் அர்ச்சனா மற்றும் விஜய் வர்மா இருவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்பதால் மேற்பார்வையாளர்களாக உள்ளனர்.
மீதம் உள்ள, விஷ்ணு, மாயா, பூர்ணிமா, மணி ஆகியோர் மத்தியில் இந்த டாஸ்க் நடந்தது.
பிக்பாஸ் வீட்டில் மணியிடம் முயலை கொடுக்கும் போது காரி துப்பி கொடுத்த பூர்ணிமாவின் செயல் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.