நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பரிசு
ஜெயிலர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் சக்சஸ் பார்ட்டி சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அண்ணாத்த படத்துக்கே சிறுத்தை சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலி பரிசளித்தார். எனவே நெல்சனுக்கும் ஏதேனும் வெயிட்டாக பரிசு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அப்படி எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில் நெல்சன் திலீப்குமாருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பரிசு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக வெற்றியை தந்த இயக்குநருக்கு கார் பரிசாக கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் நெல்சனுக்கோ வேறு மாதிரி கொடுத்திருக்கிறதாம். அதாவது சன் பிக்சர்ஸ் பேனரில் இன்னொரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் நெல்சனுக்கு வழங்கியிருக்கிறதாம். அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்துக்கு நெல்சன் வாங்கிய சம்பளத்தையே இரு மடங்காக்கி அடுத்த படத்துக்கு சம்பளமாக கொடுக்க தயாராகி இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ்