ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்லோகங்கள்

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை.

ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம்

ப்ராத:ஸ்மராமி’ லலிதா வதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயநம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்ஜ்வல பாலதேசம்

ப்ராதர்பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரத்நாங்குளீயலஸ்தங் குளிபல்லவாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமாநாம்
புண்ட்ரேக்ஷ சாப குஸு மேஷ ஸ்ருணீர்த்தாநாம்

ப்ராதர்நமாமி லலிதாசரணாரவிந்தம்
பக்தேஷ்டதாநநிரதம் பவஸிந்துபோதம்
பத்மாஸாநாதிஸுரநாயக பூஐநீயம்.
பத்மாங்குசத்வஜ் ஸுதர்சநலாஞ்சநாட்யம்

ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்யவிபவாம் கருணாவைத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டிவிலயுஸ்தி திஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகமவாங்மநஸாதிதூராம்
ப்ராதர்வதாமி லலிதே தவ புண்யநாம்
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீ பரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி

ய: ச்லோகபஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸௌபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் சரியம் விபுலஸௌக்யமநந்தகீர்த்திம்

விளக்கம்

காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன்.

அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும், பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும், மாணிக்க குண்டங்களுடையதாயும், புன்முறுவல் உடையதாயும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது.

காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன்.

அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும், மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன.

பக்தர்களின் இஷ்டத்தை எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக் கடலைக் கடப்பதற்காக அமைவதும், பிரம்மதேவன் முதலிய தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடிசுதர்சனம் முதலிய இலச்சினை கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.

உபநிஷத்துக்களில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கு அப்பாற்பட்டவளுமான பரசிவையான ஸ்ரீ லலிதாம்பிகையை காலையில் ஸ்தோத்திரம் செய்கிறேன்.

ஹே லலிதாம்பிகே உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதாய் என்றும், வாக் தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் அல்லவா அந்த பெயர்கள் அமைந்தன.

ஸ்ரீ லலிதாம்பிகையின் ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை.

Thanjavur Kovil Previous post தஞ்சைப் பெருவுடையார் கோயில் வரலாறு
வாழைப்பழம் Next post வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்னவாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *