ரஜினிக்கு BMW.. இதுதான் காரணமா
ரஜினிக்கு கலாநிதி மாறன் செக்கையும் கொடுத்து காரையும் பரிசாக கொடுத்தற்கான பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதன்படி ரஜினிகாந்த் அடுத்ததாக ஞானவேலு இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்கிறார். அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்தப் படம் மிகப்பெரிய வசூலை எடுக்கும் என இப்போதே கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
அதன் காரணமாக அந்தப் படத்தை தயாரிப்பதற்கு பல நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன. அந்த ரேஸில் சன் பிக்சர்ஸும் இருக்கிறதாம். இப்படிப்பட்ட சூழலில் ஜெயிலர் படம் மெகா ஹிட்டாகியுள்ளது.
இதனால் அனைவருமே ஹேப்பி மூடில்தான் இருக்கிறார்கள். இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கலாநிதி ரஜினிக்கு ஜெயிலர் லாபத்தில் பங்கு, பிடித்த கார் பரிசு என அள்ளி கொடுத்து ரஜினி – லோகேஷ் கனகராஜ் படத்தை லாக் செய்ய இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.