ஜவான் படத்தின் டிரைலர்
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்நிலையில், ‘ஜவான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் அதிரடி ஆக்ஷனில் கலக்கும் இந்த டிரைலரில் ‘எல்லாரும் அவனுக்கு Fan ஆயிட்டாங்க’ என்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.