ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி

இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.

பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாகப் பிரிந்துவிடும்.

அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் இன்று செலுத்தப்பட்டது.

ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் திட்டமிட்டப்படி பிரிந்தது.

மாதிரி விண்கலத்தின் பாராசூட் விரிந்த நிலையில் தரையிறங்கியது.

இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக நடந்தது என தெரிவித்தார்.

 

Previous post டாஸ்க் காக அடித்துக் கொள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்கள்
Next post சண்டைகளுக்கு வாத்தி எடுக்கப்போகும் அவதாரம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *