
ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை
விடை – மரம்
காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம்
கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?
விடை – கொக்கு
உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான்
விடை – ஊசி
காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை
விடை – ஈ
ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
விடை – துடைப்பம்
கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?
விடை – மின்விசிறி
நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?
விடை – அன்னம்
கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும்
விடை – தேனீ
ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
விடை – எறும்பு
வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
விடை – நெருப்பு