பார்க்கத்தான் கறுப்பு; ஆனால் உள்ளமோ சிவப்பு நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?
விடை – தேயிலை
பல் துவக்ககாதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள்?
விடை – சீப்பு
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
விடை – உப்பு
பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
விடை – சீப்பு
வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு வயிறில்லை
விடை – அகப்பை
காதை திருகினால் பாட்டு பாடுவான்? அவன் யார்?
விடை – ரேடியோ
நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
விடை – பட்டு
நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
விடை – நத்தை
நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
விடை – தையல் ஊசியும் நூலும்
வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான்
விடை – நாட்காட்டி