Bigg Boss பிக்பாஸில் ஏற்பட்ட மோதல் ரவீந்தரை அடிக்க பாய்ந்த நடிகர் ரஞ்சித்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டு நாட்களில் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.
பிக் பாஸ்
6ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனா முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்டார்.
பின்பு இந்த வார தலைவராக தர்ஷிகா வெற்றி பெற்றுள்ளார். ஆரம்ப தினத்திலிருந்து பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக்பாஸில் இன்று சரியான சண்டை ஏற்பட்டுள்ளது.
பவித்ராவை விஷால் டி என்று அழைத்தது பிடிக்காமல் சண்டையிட்டுள்ளார். இதில் விஷால் தான் பேசியதில் தவறில்லை என்று வாதாடியுள்ளார். ஆனாலும் இருவரின் வாக்குவாதம் எல்லைமீறி சென்றுள்ளது.
இதனையடுத்து இரண்டாவது வெளியான ப்ரொமோ காட்சியில் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ரஞ்சித் கலாய்ப்பதாக ரவீந்தரை பேசியுள்ளார். இது பிடிக்காமல் ஏற்பட்ட சண்டையில் வீடே ஆட்டம் கண்டுள்ளது.
தடுக்க சென்ற போட்டியாளர்களையும் கீழே தள்ளிவிட்டு ரஞ்சித் கடுமையாக தனது கோபத்தினை வெளிக்காட்டியுள்ளார்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 9th Oct 24 – Promo 2
One thought on “Bigg Boss பிக்பாஸில் ஏற்பட்ட மோதல் ரவீந்தரை அடிக்க பாய்ந்த நடிகர் ரஞ்சித்”