
கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
விடை – சோளப்பொத்தி
மூன்றெழுத்துப் பெயராகும் முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
விடை – பஞ்சு
கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை
விடை – சட்டை
கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
விடை – கரும்பு
மணல் வெளியில் ஓடுது, தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
விடை – ஒட்டகம்
பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான்
விடை – வானொலிப் பெட்டி
சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?
விடை – கொசு
நான்தான் சகலமும் என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன் நான் யார் ?
விடை – காற்று
கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?
விடை – தேங்காய்
முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
விடை – அஞ்சல் தலை