மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
விடை – அன்னாசிப்பழம்
ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான்
விடை – மூச்சு
சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?
விடை – வாழைப்பழம்
அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம்
விடை – வளையல்
வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?
விடை – விமானம்
ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன்
விடை – கடிதம்
உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
விடை – எறும்பு
நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது
விடை – தென்றல்
வெயிலில் மலரும், காற்றில் உலரும்
விடை – வியர்வை
காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?
விடை – முட்டை
Good Information