அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 16

அம்மா போடும் வட்டம், பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம் சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?

விடை – அப்பளம்

தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?

விடை – பனம்பழம்

முயல் புகாத காடு எது?

விடை – முக்காடு

உயரத்தில் இருப்பிடம் தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?

விடை – இளநீர்

தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

விடை – பென்சில்

கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?

விடை – சவப்பெட்டி

மழை காலத்தில் குடை பிடிப்பான், மனிதனல்ல

விடை – காளான்

ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?

விடை – தற்கொலை

எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள், அவள் யார்?

விடை – செல்போன்

ஓவென்று உயர்ந்த மலை, நடுவே உடன் பிறப்பு இருவர் ! ஒருவரை மற்றவர் பார்ப்பதுமில்லை; பேசுவதும் இல்லை

விடை – கண், மூக்கு.

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 14
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *