அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 14

ஆடும் வரை ஆட்டம் , ஆடிய பின் ஓட்டம் அது என்ன?

விடை – இதயம்

தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி

விடை – ஒட்டகம்

ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?

விடை – தேங்காய்

பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?

விடை – கண்கள்

முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கை தேவை?

விடை – ஆபத்து

மண்ணுகுளே கிடப்பான் மங்களகரமானவன் அவன் யார்?

விடை – மஞ்சள்

நிலத்தில் முளைக்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?

விடை – தலை முடி

குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன?

விடை – பணியாரம்

எழுதி எழுதியே தேய்ஞ்சு போனான்

விடை – பென்சில்

பச்சைபெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்

விடை – வெண்டைக்காய்

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 13
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *