அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 7

முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?

விடை – மின்சாரம்

வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை

விடை – செருப்பு

மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?

விடை – அணில்

நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன் நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு

விடை – ஆமை

தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
விடை – நெல்

பூ பூக்கும் காய் காய்க்கும் ஆனால் பழம் பழக்காது

விடை – தேங்காய்

கையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார் ஆனாலும் நல்லவர்

விடை – தையல்காரர்

வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?

விடை – வழுக்கை / பொக்கை

இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு, குணத்திலே எரிப்பு விடை தெரியுமா?

விடை – மிளகாய்

எவ்வளவு முயன்றாலும் அவனை கடிக்க முடியாது அவன் இல்லாமல் உணவே இல்லை அவன் யார்?

விடை – தண்ணீர்

Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 6
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *