ஒருவருடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு அவருக்கு பணம் என்ற ஒன்று கண்டிப்பாக முறையில் தேவைப்படும். அப்படி நம்முடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக நாம் பணத்தை செலவு செய்கிறோம் என்றால் செலவு செய்யும் பணத்தை விட மேலும் அதிகமாக பணம் நம்மிடம் வந்து சேர்ந்தால்தான் மனமகிழ்ச்சி அடையும். அப்படி செலவு செய்த பணத்தை விட பல மடங்கு பணம் வந்து சேர செய்ய வேண்டிய ஒரு பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வரவுக்கேற்ற செலவு செய்து வாழ்ந்தால் தான் கடன் என்ற ஒன்று இருக்காது என்று நம் முன்னோர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் செலவுக்கு ஏற்றார் போல் நாம் வரவை வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் கடன் இல்லாத சுமூகமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
அதையும் தாண்டி நாம் பணத்தை ஏதாவது ஒரு செயலுக்காக செலவு செய்கிறோம் என்றால் மன கஷ்டப்பட்டு, வருத்தப்பட்டு அந்த செலவை செய்யக்கூடாது. அப்படி செய்தால் மகாலட்சுமி தாயார் மன வருத்தப்பட்டு நம்மிடம் திரும்பி வரமாட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக நாம் பணத்தை செலவு செய்யும் பொழுது மணமகிழ்ச்சியுடன் மகாலட்சுமி தாயாரை வழி அனுப்பினால் அவர் மறுபடியும் நம்மிடமே திரும்பி மனமகிழ்ச்சியுடன் வருவார்.
இதே போல் தான் நாம் நம் கையால் பணத்தை எதற்காகவாவது செலவு செய்கிறோம் என்றால் முதலில் அந்த பணத்தை எடுத்து மனதார மகிழ்ச்சியுடன் “சென்று வா திரண்டு வா” என்ற வாசகத்தை நம் மனதிற்குள் உச்சரித்து பிறகு சிரித்த முகத்துடன் செலவு செய்ய வேண்டும்.