நாளை ரக்ஷா பந்தன் பண்டிகை – பிரதமர் மோடி வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள்.
எரிவாயு விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.
என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம் என பதிவிட்டுள்ளார்.