ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும், “எனது 23-வது படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Previous post விடாமுயர்ச்சி & ஏகே63
Next post திருப்பதியில் தேரோட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *