ஜவான் படம் பாடல் ராமைய்யா வஸ்தாவய்யா வெளியீடு
நடிகர் ஷாருக்கான் -அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள ஜவான் படம் சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஷாருக்கானின் பதான் படம் 1000 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், ஜவான் 1500 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் அட்லி, இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ள நிலையில், அவரது முதல் படமே ஷாருக்கானுடன் அமைந்துள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜவான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது ராமைய்யா வஸ்தாவய்யா பாடலையும் இந்த மொழிகளில் ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். இது ஜவானின் பண்டிகை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.