
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 1ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் கதிர்,, நடிகர் பப்லு பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மாகாபா ஆனந்த், மௌன ராகம் சீரியல் ரவீனா, சின்னத்திரை நடிகர் விஷ்ணு, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சீரியல் நடிகை நிவிஷாவும் கலந்து கொள்ள இருக்கின்றாராம். இவர் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான சிலரும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகின்றது.