
தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தாய்ப்பால் புகட்டுவது தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட உடல் மாற்றங்களில் இருந்து மீள்வதற்கு உதவுகிறது மற்றும் குழந்தை பிறக்கும் போது ஏற்பட்ட வலியை மறந்து, குழந்தையை மகிழ்ச்சியாக கொஞ்சவும் வழி செய்கிறது.
கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலத்தில் கருப்பையில் மாற்றம் ஏற்படும். குழந்தை பேற்றிற்கு பின் கருப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய தாய்ப்பால் உதவுகிறது.
தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றின் போது ஏற்பட்ட இரத்த இழப்பை சரிசெய்து, அது சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவது குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. அதாவது பெண்களின் கருப்பையில் அண்டம் உருவாவதை தாமதிக்கிறது.
தாய்ப்பால் புகட்டுவதால் தாய்க்கும், சேய்க்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாகவும் பிணைப்பு ஏற்படும்.
தாய்ப்பால் கொடுப்பதால், அது தாயிடத்தில் சுய மரியாதையை ஊக்குவிக்கிறது.
தாய்ப்பால் மிகவும் சிக்கனமானதும் கூட. எப்படியெனில் செயற்கையாக ஆரோக்கிய உணவுகள் புகட்ட முற்படுதல் அதிக செலவை ஏற்படுத்தும். மேலும் அது சராசரி குடும்ப செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவு பிடிக்கும்.
தாய்ப்பால் குழந்தை பேற்றிற்கு பின் தாய்மார்கள் உடலில் எடை இழக்கவும் உதவுகிறது.