கல்பவிருட்ச வாகன சேவை
திருப்பதி திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தில் இன்று ஏழுமலையான் தங்க கல்பவிருட்ச வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இன்று காலை 9 மணியளவில் கேட்டதை அளிக்கும் கல்ப விருட்ச வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட ஏழுமலையான் பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக திருமாட வீதிகளில் பவனி வந்தார்.
மதியம் 2 மணி முதல் 4 மணி வரை முதல் ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இரவு சர்வ பூபால வாகன சேவை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காலை ஏழுமலையான் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.
விலங்குகளிலேயே வலிமையானதாகக் கருதப்படும் சிம்மத்தையே வாகனமாகக் கொண்டு திரு மாட வீதிகளில் பச்சைப் பட்டுடுத்தி ஏழுமலையான் பவனி வந்தார்.