லால் சலாம் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

லால் சலாம் டப்பிங் பணிகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதத்தையும் நம்பிக்கையும்
மனசுல வை
அதுக்கு மேல மனிதநேயத்தை வை
அதுதான் நம்ம நாட்டோட அடையாளம்
– லால் சலாம் – மொய்தீன் பாய்

Previous post ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் எல்-1 புள்ளிக்கு நகர்த்தப்பட்டது
Next post எடையைக் குறைத்த குஷ்பு மாடர்ன் லுக்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *