ஓணம் சத்யா உணவில் இருக்கும் சிறப்புகள்
கேரளாவில் புகழ்பெற்ற ஒரு பண்டிகை தான் இந்த ஓணம் பண்டிகை . இந்தப் பண்டிகையில் பல்வேறு விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்களாக கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரைக்கும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகையில் மிகப் பெரிய திருவிழா தான் இறுதியாக நடைபெறும் திருவோண நட்சத்திரத்திர் வரும் திருவோண பண்டிகை. இந்தப் பண்டிகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கிறது.
இதில் ஒரு சிறப்பம்சம் தான் ஓணம் சத்யா உணவு. இந்த உணவின் சிறப்புக்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஓணம் சத்யா உணவு
இந்த உணவு ஓணம் பண்டிகையின் சிறப்பே இந்த சத்யா உணவு தான். இந்த உணவு கேரளாவின் சமையல் பாரம்பரியத்தையும், ஊட்டச்சத்து நன்மைகளையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.
இந்த உணவில் குறைந்தது 26 வகையான உணவுகள் சரி இருக்க வேண்டும்.இந்த உணவுகளில் சிலவற்றைப் பார்க்கலாம்.
காலன் தயிர், தேங்காய், நேர்துர வாழைப்பழம் அல்லது கிழங்குகளைப் பயன்படுத்தி தயார்செய்யப்படும் பாரம்பரிய உணவு.
அவியல் பலவகையான காய்கறிகளுடன் குறைந்த அளவில் மசாலா சேர்த்து தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் தாளித்து செய்த அவியல்
ஓலன் கேரள் பாரம்பரிய உணவு ஓலன். மசாலா ஏதும் சேர்க்காமல் பரங்கிக் காய், பட்டாணி, தேங்காய் பால் கலந்து செய்யப்படும் ஒரு உணவு.
கூட்டுக்கறி சன்னாவோடு வாழைப்பழம் அல்லது கிழங்கு சேர்த்து சமைக்கப்படும் உணவு.