விநாயகர் சதுர்த்தி – விநாயகரை வழிபடும் முறை
அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நல்ல சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வருவதற்கு முன் வீட்டை சுத்தம் செய்து, நாமும் குளித்து முடித்து சுத்தமாக சென்று விநாயகர் சிலையை வாங்கி வர வேண்டும். சிலையை சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடி, வைக்கவும்.
புன்னிய நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரை தெளித்து, தீபம் ஏற்றி, நெற்றியில் குங்குமத் திலகம் இட்டு, லட்டு 5 வகையான உலர் பழங்கள், 5 வகையான பழங்கள் வைத்து அலங்கரிக்கவும் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை வெவ்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கவும்.
இந்த நாட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது, எனவே விநாயகப் பெருமானை வீட்டில் கொண்டு வர முடியாதவர்கள், கோவில்களுக்குச் சென்று, கணபதிக்கு லட்டு சமர்ப்பித்து பிரார்த்தனை செய்யலாம்.
விநாயகர் சிலையை வீட்டின் வட கிழக்கு திசையிலேயே வைக்க வேண்டும். விநாயகர் சிலை, மேற்கு நோக்கி இருக்கும் வகையிலேயே வைக்க வேண்டும்.
விநாயகர் சிலையை வைத்த பிறகு எந்த ஒரு காரணத்திற்காகவும் அதை அங்கிருந்து அகற்றக் கூடாது. கரைப்பதற்காக எடுத்துச் செல்லும் போது மட்டுமே விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.
விநாயகர் சிலை வீட்டில் வைத்திருக்கும் போது எந்த காரணத்திற்காகவும் அசைவம், மது உள்ளிட்ட போதைப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. விநாயகர் உற்சவத்தில் வீட்டை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் குறைக்கவேண்டும். இந்த முறை வழிபாடு பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு.