இளமையின் ரகசியம் திராட்சை
திராட்சையில் உள்ள பாலிபினாஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஒரு கிளாஸ் ஓயினில் இருப்பதைவிட மிகவும் அதிகம். திராட்சையில் அடங்கியுள்ள ஆண்டி ஆக்ஸிடண்டான வைட்டமின் சி, ரெஸ்வரட்ரால் உள்ளது.
எப்போதும் இளமையான தோற்றத்தை கொடுக்கிறது. திராட்சையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முக சுருக்கங்கள் நீங்கி முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவாகவும் காணப்படும்.
திராட்சை தொடர்ந்து சாப்பிட்டால், கருவளையத்தை போக்கிவிடும். கரும்புள்ளிகளை நீக்கும். சீரான சருமத்தை தரும். பக்டீரியா தொற்றுகள் அதிகரிக்காது. வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளதால், பருக்களின் வீக்கம் மற்றும் சிவப்பை போக்குவதில் மிகவும் பயன்தர கூடியதாக இருக்கும்.
சருமம் வரட்சியடைவதை தடுக்கும். சீரான ஈரப்பதத்தை பாதுகாக்கும். சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி உடலை எப்போதும் மிருதுவாக வைத்துக்கொள்ள உதவும்.