இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க செய்யும் ஒரு சிறந்த மூலிகை தேநீர்

தேவையான பொருட்கள்.:

கொய்யா இலை – 5 எண்ணிக்கை,
தண்ணீர் – 200 மி.லி.
முருங்கை இலை – ஒரு கைப்புடி அளவு,
வெற்றிலை – 3 எண்ணிக்கை.

செய்முறை.:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு 200 மி.லி., தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

மேலும் நீருடன் மூன்று வகையான இலைகளையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.

பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பாட்டிற்கு பின் குடித்து வந்தால் இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதாக குறைக்கலாம்.

தேநீர் Previous post சாப்பாட்டுடன் தேநீர் குடிக்கலாமா
விஜய்யின் மகன் Next post இயக்குனராகிறார் நடிகர் விஜய்யின் மகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *