லிட்டில் கிருஷ்ணர்களாக மாறிய நயனின் உயிர், உலகம்
நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தார். அந்த வேளையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜுன் 9ஆம் திகதி திருமணமும் செய்துக் கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
மேலும், இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என வித்தியாசமான பெயரையும் வைத்திருக்கிறார்.
மேலும், கடந்த வாரம் நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அதிகார்வபூர்வ கணக்கை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், நயன்தாரா தற்போது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வரும் நயன் அனைத்துப் பண்டிகைகளிலும் தன் குழந்தைகளுடன் கொண்டாடும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில், நேற்று அனுஷ்டிக்கப்பட்ட கிருஷ்ண ஜெயந்தியில் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
#Uyir & #Ulag 💕 pic.twitter.com/OWqlP07QU2
— Nayanthara✨ (@NayantharaU) September 6, 2023