Bigg Boss வலைக்குள் மாட்டிய மீனாக தவிக்கும் ரயான்

Bigg Boss வலைக்குள் மாட்டிய மீனாக தவிக்கும் ரயான்

“வலைக்குள் மாட்டிய மீனா ரயான் இருக்கிறார்..” என ரஞ்சித் பேசியது ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

Bigg Boss

கடந்த அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களை தேர்வு செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்த பிக்பாஸ் அதன் பிறகு வாரந்தோறும் ஒரு போட்டியாளரை வெளியேற்றி வருகிறார்.

இதையடுத்து டிஆர்பி ரேட்டை அதிகரிக்கும் வகையிலும் டுவிஸ்ட் கொடுக்கும் வகையிலும் வைல்டு கார்டு மூலமாக 6 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி ரணகளத்தை ஏற்படுத்தியுள்ளார்.

எப்போதும் இல்லாத வகையில் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வந்தார்கள். இதனால், ஆட்டம் சூடுபிடித்துள்ளதுடன் போட்டியாளர்களும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி வெற்றிகரமாக 10 வாரங்கள் கடந்துள்ளது.

வலைக்குள் சிக்கி இருக்கிறாரா ரயான்?

இந்த நிலையில் 10 வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் இவர்கள் சரியாகவில்லை என நினைக்கும் போட்டியாளர்களை தெரிவு செய்யும் டாஸ்க் இன்றைய தினம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில், அன்பிற்கு அடையாளமாக இருக்கும் ரஞ்சித், உண்மை முகத்தை மறைத்து போலியாக நடிக்கிறார் என்று பவித்திரா, வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார் என ரயான் ஆகிய போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வைல்ட் கார்ட் என்றியாக பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ரயான் வந்த நாள் முதல் இன்று வரை ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யாவுடன் இணைந்து தான் விளையாட்டு விளையாடுகிறார். இதனை கண்டறிந்த ரஞ்சித் அந்த காரணத்தை வைத்து இந்த வாரம் நாமினேட் செய்துள்ளார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 13th Dec 24 – Promo 1

Previous post Bigg Boss 2 தடவை வார்னிங் வாங்கிய சௌந்தர்யா
Next post Bigg Boss: கொட்டும் மழையில் ஜாக்குலினுக்கு தண்டனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *