Bigg Boss மீண்டும் தொழிலாளியாகும் அருண்
அருணுக்கு ஆதரவாக நிற்கும் சௌந்தர்யாவை பார்த்து மொத்த பிக்பாஸ் போட்டியாளர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
Bigg Boss
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது 60 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் மத்தியில் சூடுபிடித்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரங்களில் இல்லாதவாறு நேற்றைய தினம் டபுள் எவிக்ஷன் கொடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக முத்துக்குமரன் அதிக ஓட்டுகளால் முன்னணியில் இருந்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக சௌந்தர்யா, ஜாக்குலின், மஞ்சரி, ராணவ், பவித்ரா என வாக்குகளால் பிக்பாஸ் வீட்டில் தங்களின் இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியொரு சமயத்தில், முத்துகுமரரின் ஆட்டத்தில் கடந்த சில நாட்களாக சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் தொழிலாளர்கள் அணியில் இருந்த அருண் முகாமைத்துவத்திற்கு சென்றுள்ளார். அந்த பக்கம் இருந்தவர்களில் ஒருவர், தொழிலாளர்கள் பக்கம் வந்துள்ளார்.
அந்த வகையில், அருண் முகாமைத்துவத்திற்குள் வந்தது அங்கிருக்கும் மஞ்சரி, தீபக், முத்துகுமரன் மற்றும் தர்ஷிகா ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை மீண்டும் தொழிலாளர் அணிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இதனை சபையில் பிக்பாஸிடம் கூறும் பொழுது சௌந்தர்யா மாத்திரம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஏனெனின் மொத்த குழுவும் ஒரே முடிவில் இருந்தால் அருண் தொழிலாளியாக மாறி விடுவார்.
இதனை தடுக்கும் விதமாக சௌந்தர்யா நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 11th Dec 24 – Promo 2