Bigg Boss: முட்டையை வைத்து நடந்த துன்புறுத்தல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போட்டியாளர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகின்றனர்.
Bigg Boss
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். தற்போது 55 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய டாஸ்க் வேற லெவலாக பிக் பாஸ் கொடுத்துள்ளது.
அதாவது பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் பாதி பேர் ஏஞ்சலாகவும், மீதம் உள்ள நபர் சாத்தானாகவும் இருக்கின்றனர்.
ஏஞசலாக இருப்பவர்கள் கையில் உள்ள இதய சிம்பலை தட்டிப் பறிப்பதற்கு அவர்களை பயங்கரமாக கொடுமை படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இதில் முட்டையைக் கொண்டு பவித்ரா பயங்கரமாக சித்ரவதை செய்துள்ளனர். இதனால் இன்றைய நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆவலாக இருக்கின்றனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 4th Dec 24 – Promo 4