Bigg Boss: வைல்ட் கார்ட் போட்டியாளர்களை குறி வைக்கும் தீபக்
வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் தீபக்கை குறித்து வைத்த நிலையில், இன்றைய தினம் தீபக் அதிரடியாக களமிறங்கியுள்ளார்.
Bigg Bogg
மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.
இந்த சீசனில் முகம் தெரிந்த பிரபலங்களை விட முகம் தெரியாத பிரபலங்களின் தெரிவு அதிகமாக உள்ளது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையன்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சிக் கொடுக்கும் வகையில், சுமாராக 6 புதிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரிக் கொடுத்த பிரபலங்கள் அமைதியாக சென்றுக் கொண்டிருந்த பிக்பாஸ் வீட்டை சற்று சூடு பிடிக்க வைத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக புதுப்புது டாஸ்க், முதல் ஓபன் நாமினேஷன் என வீடே ரெண்டுபட்டு கிடைக்கிறது.
சௌந்தர்யாவால் எழுந்த சர்ச்சை
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினம் கோட்டை அடிப்படையாக வைத்து சண்டைகள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில், இரு அணிகளும் தங்கள் வீட்டில் ஆலோசனை செய்து வந்துள்ளனர். அப்போது, கோட்டைத் தாண்டி வருவதற்கு நாம் ரூல்ஸ் போடுவதில் என்ன தவறு இருக்கிறது என தர்ஷிகா கேள்வி எழுப்புகிறார்.
அதே சமயம், நாம் 30 வினாடிகளில் கூறிய எந்த காரணங்களும் அவர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை என ஆண்கள் அணியினர் கூறுவதாக மஞ்சரி கருத்து தெரிவிக்க ஆரம்பித்து அப்படியே வாதம் பெரிதாகியுள்ளது.
இன்றைய தினம் ஒருவரை போல் நடந்து கொள்ளும் மற்றொருவர் யார்? என பிக்பாஸ் கேட்க, அதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் தீபக், வைல்ட் கார்ட் போட்டியாளர்களை குறி வைத்து பேச ஆரம்பித்துள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 6th Nov 24 – Promo 1