Bigg Boss: FAKE என்று முத்திரை குத்தப்படும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களின் சுயரூபம் சக போட்டியாளர்கள் மூலம் வெளிக் கொண்டுவரப்படுகின்றது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமானது.
ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், ஒரே நாளில் போட்டியாளர் சாச்சனா வெளியேற்றப்பட்டார். இவரின் வெளியேற்றம் நியாயம் இல்லை என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால் இன்றைய தினத்தில் சாச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்துள்ளார். தற்போது போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதாவது உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் உண்மையில்லாமல், பொய்யாக இருக்கின்றார்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு கொடுத்துள்ளார். இதனால் சக போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் முகத்திரையும் அம்பலமாகியுள்ளது.
Bigg Boss 8 11th Oct24 Promo 2
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8