Bigg Boss – சவுந்தர்யாவை டார்கெட் செய்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நான்கு நாட்களில் போட்டியாளர்களின் சுயரூபம் அனைத்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
பிக் பாஸ்
6ம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாச்சனா முதல் நாளில் எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸில் இந்த வார தலைவராக தர்ஷிகா வெற்ற நிலையில், வீட்டில் பரபரப்பிற்கு மட்டும் பஞசமே இல்லாமல் இருக்கின்றது.
நேற்றைய தினம் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் சண்டையிட்டுக் கொள்வது போன்று நடித்தனர். ஆனால் அது உண்மை என்று சக பெண் போட்டியாளர்களும், பார்வையாளர்களும் நினைக்கும்படியாக இருந்தது.
இந்நிலையில் இந்தவாரம் மக்கள் யாரை வெளியே அனுப்புவார்கள் என்ற கேள்வியை பிக் பாஸ் வைத்துள்ளது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் ரவீந்தர், சவுந்தர்யா, ரஞ்சித் என்று கூறியுள்ளனர்.
சவுந்தர்யா தனது கருத்தை அப்பொழுது கூறாமல், காலம் கடந்து கூறியதை சக போட்டியாளர்கள் எதிர்த்துள்ளனர். மேலும் அர்னவ் மட்டுமின்றி அனைவரும் சவுந்தர்யாவை கேள்வி எழுப்பியுள்ளனர்.
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8
Bigg Boss 8 10th Oct 24 – Promo 1