பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு செல்லப்போவது யார்
மிகப்பெரிய கொண்டாட்டங்கள் மற்றும் அறிமுகத்துடன் கடந்த 6 ஆம் திகதி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பமானது.
நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழ்வில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
பிக் பாஸ் 8
இந்நிலையில் பிக் பாஸ் 8 இரண்டாவது நாளான இன்று பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார்.
இந்த சீசன் முழுவதும் பெண்கள் ஒரு அணியாகவும், ஆண்கள் ஒரு அணியாகவும் தான் விளையாடப்போகிறார்கள், என நிகழ்ச்சியின் முதல் நாளே பிக் பாஸ் கூறிவிட்டார். அதற்காக தான் இந்த சீசனில் வீடும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாவது நாளில் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும் என்றும், ஆண்கள் அணியில் இருந்து ஒரு நபர் பெண்கள் அணிக்கு செல்லவேண்டும் என பிக்பாஸ் ஒரு திருப்பத்தை ஏற்பமுத்தியுள்ளார்.
குறித்த அணியிரே யார் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்து அனுப்பலாம் என பிக்பாஸ் குறிப்பிட்டதால் யாரை அனுப்புவது என்கிற பேச்சுவார்த்தை பரபரப்பாக நடந்துவருகின்றது.
இதில் பெண்கள் அணியில், ஜாக்லின் போக வேண்டும் என அவர நினைக்க சுனிதா ஜாக்லின் செல்வது அணிக்கு சிறந்ததாக இருக்காது என குறிப்பிட்டுள்ளார். அதன் போது இருவருக்கும் இடையில் மோதல் ஆரம்பமாகியுள்ளது.
பின்னர் பவித்ராவை அனுப்ப முடிவு செய்யும் போது ஜாக்லின், ’பவித்ரா அங்கு சென்றால் பாவம் பார்ப்பார்கள்’ என கூறவும், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாவம்னு பார்த்து அனுப்பாதீங்க, நான் விளையாடுவேன் என்று தோன்றினால் மட்டும் அனுப்புங்க’ என கோபமாக சொல்லிவிட்டு பவித்ரா எழுந்து சென்றுவிடடார்.
Bigg Boss Tamil 8th Oct24 – Promo 1
#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8