விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 35

விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 35

#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education

விடுகதைகள்

கேள்வி – தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள்.

விடை – பால், மோர், நெய்.

கேள்வி – உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும் கொடுப்பான், வழியும் நடப்பான்.

விடை – நாய்.

கேள்வி – காலையில் ஊதும் சங்கு; கறி சமைக்க உதவும் சங்கு.

விடை – சேவல்.

கேள்வி – கறுப்புச் சட்டைக்காரன்; காவலுக்குக் கெட்டிக்காரன்.

விடை – பூட்டு .

கேள்வி – தொட்டால் மணக்கும்; குடித்தால் புளிக்கும்.

விடை – எலுமிச்சம்பழம்.

கேள்வி – நடக்கத் தெரியாதவன் நடப்பவனுக்கு வழி காட்டுகிறான்.

விடை – கைகாட்டி

கேள்வி – ஏரிக்கரை உயர்ந்திருக்கும், எட்டிப் பழம் சிவந்திருக்கும், காகம் கறுத்திருக்கும், காக்கைக் குஞ்சு வெளுத்திருக்கும்.

விடை – அடுப்பு, நெருப்பு, கரி, சோறு.

கேள்வி – இரவிலே பிறந்த இளவரசனுக்குத் தலையிலே குடை.

விடை – காளான்.

கேள்வி – உலர்ந்த கொம்பிலே விரிந்த பூ- அது என்ன?

விடை – குடை.

கேள்வி – ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி.

விடை – வெங்காயம்.

Previous post வந்து நின்னது ஒரு குத்தமாடா Stress எல்லாம் பறந்துfy
Next post பிக்பாஸ் சீசன் 8-ல் இந்த ஜோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *