
விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 34
#vidukathaitamil #vidukathai #விடுகதைகள் #education
விடுகதைகள்
கேள்வி – அரைச் சாண் குள்ளனுக்குக் கால் சாண் தொப்பி.
விடை – பேனா.
கேள்வி – உயிரில்லை, ஊருக்குப் போவான். காலில்லை, வீட்டுக்கு வருவேன் வாயில்லை, வார்த்தைகள் சொல்வான்.
விடை – கடிதம்.
கேள்வி – நிலத்தை நோக்கி வருவான் நுரையைக் கக்கிச் செல்வான்.
விடை – கடல் அலை
கேள்வி – அன்னதான மண்டபத்தில் அழகான குருவி. அழகான குருவிக்கு முழம் நீளம் வால்!
விடை – அகப்பை.
கேள்வி – என் தாயோ கடல்; தந்தையோ சூரியன்; என்னை விரும்பாத விடே இல்லை.
விடை – உப்பு
கேள்வி – தம்பிக்கு எட்டும்; அண்ணனுக்கு எட்டாது.
விடை – உதடு, தம்பி என்று சொல்லும் போது கீழ் உதடு மேல் உதட்டை தொடும். அண்ணன் என்னும்போது தொடாது.
கேள்வி – அறைகள் அறுநூறு; அத்தனையும் ஓர் அளவு.
விடை – தேன் கூடு.
கேள்வி – உருவம் இல்லாதவன், சொன்னதைத் திருப்பிச் சொல்வான்.
விடை – எதிரொலி.
கேள்வி – குளித்தால் கறுப்பு, குளிக்காவிட்டால் சிவப்பு.
விடை – நெருப்பு
கேள்வி – நட்டமாய் நிற்கிறவனுக்கு நறுக்கு நறுக்கென்று கடிக்கிற வேலை.
விடை – அரிவாள்மனை.