இந்த முறை வெறும் 3 பேர் மட்டுமே நாமினேஷனில் சிக்கியிருந்த நிலையில் சரவணா விக்ரம் வெளியேற்றப்பட்டார்.
சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணி, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்த காரணத்தினால் வாக்குகள் குறைவு என வெளியேற்றியுள்ளனர்.
அந்த வாரம் நிக்ஷன் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராமல் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் பற்றி தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை காண்பதற்கு உறவினர்கள் வந்த நிலையில் அங்கு என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கமல் விவாதித்துள்ளார்.
இறுதிக்கட்டத்தை எட்டும் பிக்பாஸில் இந்த வாரம் யார் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை காரணத்துடன் சொல்லுமாறு போட்டியாளர்களிடம் ஆண்டவர் பிக்பாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.