அரசாணை வெளியீடு செப்.18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசு விடுமுறை செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.17-ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப்.18-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் செப்.17-ந்தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுகிறது.